Friday, October 7, 2011

தியாகத்தின் பயணம்



மக்கமா நகரில் உள்ள இறைவனின் இல்லத்தை தரிசனம் செய்வது இணையில்லாத ஒரு அனுபவத்தை எமக்குத் தருகின்றது. படைத்தவனது இல்லம் நோக்கி படைப்பினங்கள் மேற்கொள்ளும் தியாகப் பயணம் ஹஜ் ஆகும். ஹஜ் கடமைகள் யாவும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தை நினைவு படுத்துவதோடு அவர் ஏக இறைக்கொள்கைக்காக செய்த தியாகங்களையும் நினைவுபடுத்துகின்றது. 

ஹஜ் கடமைக்காய நீய்யத் வைத்ததுமே இத்தியாகப் பயணம் தொடர்ந்து விடுகின்றது. ‘லப்பைக்... லப்பைக்... அல்லாஹும்ம லப்பைக்’ உனது அழைப்பை ஏற்று விட்டேன் என்று கூறும் போதே இவ் உலகை துறந்து உன்னை நினைத்து விட்டேன் என்ற உணர்வு உடலெங்கும் பரவுகிறது. இதுவும் ஒரு தியாகம் தான். 

அதுமட்டுமன்றி தனது உடல் பொருள் அனைத்தையும் தியாகம் செய்தே மக்கா செல்ல வேண்டி இருக்கின்றது. இறை இல்லத்திற்கு சென்றாலும், தனது சொத்தில் ஒரு தொகையை இழக்க வேண்டி இருக்கின்றது. இதுவும் தியாகம் தான்.
Read more »

No comments: