நேற்று இரவு முச்சக்கர வண்டியில் ஒரு சிலர் கண்டியிலிருந்து கொழும்புக்கு மரணவீடொன்றுக்கு வந்து திரும்பிக்கொண்டிருக்கும் போது கஜூகமையில் முச்சக்கரவண்டி பஸ்ஸென்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 3 பெண்களில் ஒருவரும், 3 சிறுவர்களில் ஒரு சிறுமியும் ஸ்தலத்திலேயே உயிரிலந்துள்ளார்கள். ஏனையோர் பாரிய காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். இங்கு முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதியின் மனைவியும், 1.5 வயதுக் குழந்தையுமே உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது. பஸ் சாரதி மதுபோதையில் பஸ்ஸை செலுத்தியதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து உடனே எமது ஊரைச்சோ்ந்த சில சகோதரர்கள் முன்னால் மு.கா. பிரதேச சபை உறுப்பினரும், தற்போதைய வேட்பாளருமான சகோதரர் நாஸர் தலைமையில் உடனடியாக அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளையும், வந்தவர்களுக்குத் தேவையான உணவு தங்குமிட வசதிகளையும் செய்துகொடுத்ததாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.
Tweet Tweet

No comments:
Post a Comment