Thursday, February 17, 2011

படி; போராடு; சேவை செய்...!

        இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) சென்னை மாவட்ட மாநாடு 26.09.10 ஞாயிறன்று சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் பதிவு செய்யப்பட்ட சிறப்புரை ஒளிபரப்பப்பட்டது. அந்த சிறப்புரையிலிருந்து சில பகுதிகள்...

படி; போராடு; சேவை செய்...!

நீங்கள் இளைஞர்கள். இளைஞர்கள்தான் ஒரு சமுதாயத்தின் உயிர்நாடி, முதுகெலும்பு. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம், மேம்பாடு என்பது இளைஞர்களின் முன்னேற்றம், மேம்பாடு ஆகியவற்றில்தான் தங்கி இருக்கிறது. அதனால்தான் எந்த ஒரு சமுதாயத்திலும் இளைஞர்கள் முக்கியத்துவப்படுத்தி நோக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் நலமாக இருந்தால் உலகமும் நலமாக இருக்கும். இளைஞர் சமுதாயம் சீர்கெட்டிருக்கும்போது மனித சமுதாயமே சீர் கெட்டுவிடும். அவர்களின் நிலை ஆரோக்கியமற்றதாக மாறிவிடும்போது முழு மனித சமுதாயத்தின் நிலையும் ஆரோக்கியமற்றதாக மாறிவிடும்.

உலகம் ஆரோக்கியம் பெற வேண்டுமானால் அனைவரின் கவனமும் இளைஞர்களின் மீது குவிக்கப்படுவது இன்றியமையாததாகும். அதுவும் குறிப்பாக, கல்வித் துறையில் ஈடுபாடுள்ள இளைஞர்களை இலக்காக வைத்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு மேற்கொண்டு வருகின்ற பணிகள் பாராட்டத்தக்கவை காத்திரமானவை. அதற்குரிய நற்கூலி அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென நான் பிhர்த்திக்கின்றேன்.

அன்புக்குரிய இளைஞர்களே, நாளைய உலகம் நலமாக அமைவதற்கு இன்றைய இளைஞர்கள் அதிலும் மாணவர்கள் தமக்குள்ள கடமைகளை, பொறுப்புக்களை மிகச் சரியாக உணர்ந்து புரிந்து செயல்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

இந்த வகையில் மாணவர்கள்இளைஞர்கள் தாம் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான மூன்று கடமைகளைப் பற்றி (படி, போராடு, சேவை செய்) புரிந்து கொள்ள வேண்டும். அந்த மூன்று கடமைகள் பற்றிய சில கருத்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன்.

இளைஞர் சமுதாயம் முதலில் படிக்க வேண்டும். அவர்கள் துறை சார்ந்த வல்லுநர்களாய் மாற வேண்டும். சிறந்த புத்திஜீவிகளாய், வழிகாட்டிகளாய், சமூகத் தலைவர்களாய் மாற வேண்டும். மிக்க ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கற்றலில் ஈடுபாடு காட்ட வேண்டும்.

உண்மையில் எந்த ஒரு நாட்டையும் எந்த ஒரு சமூகத்தையும் பொறுத்தவரை அந்தச் சமுதாயத்தில் இருக்கிற இளைஞர்கள் படித்தவர்களாய், புத்திஜீவிகளாய் தங்களை உருவாக்கிக் கொள்ளாதபோது அந்தச் சமுதாயம் எழுச்சி பெற முடியாது அந்த நாடு எழுச்சி பெற முடியாது. அதன் விளைவாக உலகம் சீராக முடியாது. குறிப்பாக நானும் நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த யுகம் 'அறிவு யுகம்' என்று வர்ணிக்கப்படுகிறது. எல்லாம் அறிவு மயப்படுத்தப்பட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறNhம். எல்லாக் காலங்களிலும் செல்வங்களில் உயர்ந்த செல்வம் அறிவுச் செல்வம், கல்விச் செல்வம் என்று சொல்லப்பட்டபோதும் குறிப்பாக நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலம், எல்லாம் அறிவுமயப்படுத்தப்பட்ட காலமாக இருப்பதைத் தெளிவாகப் பார்க்கிறNhம்.

இன்று உற்பத்திக் காரணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்திக் காரணியாக அறிவு (நொலேஜ்) மாறி இருக்கிறது. ஒரு காலத்தில் நிதி மூலதனம், உழைப்பு, ஊதியம் முதலான உற்பத்திக் காரணிகள் பெற்ற முக்கியத்துவத்தை விடப் பன்மடங்கு முக்கியத்துவம் உள்ளதாக அறிவு மாறியுள்ளது. அதனால்தான் இன்றைய உலகில் முதன்மை பெறுபவர்களாக, ஜாம்பவான்களாக இருப்பவர்கள் 'நோலேஜ் வேர்க்கர்ஸ்' என்று சொல்லப்படுகின்ற அறிவுத்துறையிலே தேர்ச்சி பெற்றவர்கள்தாம் என்பதை நாம் அறிவோம். இன்றைய உலகில் செல்வந்த நாடுகளைப் பார்க்கிறபோது அந்த நாடுகளின் வருமானத்திலே 85 விழுக்காடு அறிவின் மூலம் பெறப்படுகிறது. ஒரு 15 விழுக்காடு வருமானம்தான் ஏனைய பாரம்பரிய உற்பத்திக் காரணிகளின் ஊடாகப் பெறப்படுவதை நாம் பார்க்கிறNhம். எனவே ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமா, ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலை சீராக வேண்டுமா, தார்மிக, ஆன்மிக, ஒழுக்கப் பண்பாட்டு நிலை சீராக வேண்டுமா அதற்கு வழி அந்தச் சமுதாயத்தின் இளைஞர்கள் படித்தவர்களாய் உருவாவதுதான். அது தவிர மாற்றுவழி கிடையாது. இன்றைய உலகமும் நாம் வாழும் சமூகங்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது நாம் அடையாளப் படுத்தக்கூடிய மூன்று பிரச்சினைகளைப் பார்க்கிறNhம்.


இன்று உலகம் எதிர்கொள்கின்ற முதல் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினைவறுமை. இரண்டாவது எதிர்கொள்கின்ற பிரச்சினை சுகாதாரம்நோய்கள். அடுத்ததாக ஆன்மிக, தார்மிக, ஒழுக்க, பாண்பாட்டுத் துறையில் காணப்படுகின்ற வீழ்ச்சி. இந்த முப்பெரும் பிரச்சினைகளுக்கான முதன்மைக் காரணம் சமூகம் கல்வித் துறையில், அறிவுத் துறையில் பின்னடைந்து காணப்படுவதுதான். அறிவு நிலை சீராகிவிட்டால், கல்வி நிலை சீராகிவிடும் சுகாதார நிலை சீராகிவிடும். ஒழுக்க நிலையும் சீராகிவிடும். அவ்வையார் எனும் பெண்பாற் புலவர் தம் காலத்தில் வாழ்ந்த மன்னரைப் பாராட்ட  விரும்பியபோது இரண்டே வார்த்தைகளில் பாராட்டினார். 'வரப்புயர'இவ்வளவுதான் சொன்னார். இதன் மூலம் அவர் என்ன செய்தியைச் சொன்னார்?
Read more »

No comments: