Wednesday, February 16, 2011

Facebook சமூக வளைத்தள வாலிபர்களுக்கு பாராட்டுகள் !


February 16, 2011.... AL-IHZAN Local News

இன்று அல்லாஹ்வின் தூதரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சக்தி டிவி ஒளிபரப்பாக்க தீர்மானித்திருந்த ‘ பொக்கிஷம்’ என்ற தமிழ் திரைப்படம் முஸ்லிம் வாலிபர்கள் சமூக வளைத்தளம் Facebook மூலம் மேற்கொண்ட முயற்சியால் அந்த குறித்த திரைப்படத்தை சக்தி டிவி ஒலிபரப்புவதில்லை என்று நிறுத்தியுள்ளது என்பதை சமூக வளைத்தள தகவல்களின் ஊடாக அறிய முடிகின்றது.
கடந்த சில மாதங்களாக Facebook சமூக வளைத்தளத்தில் ‘இஸ்லாமிய பெருநாள் தினங்களில் பெருநாளின் பெயரை பயன்படுத்தி திரைப்படம் போடப்படுவதை எதிர்போம்’  என்ற விடய பக்கத்துக்கு ஆதரவாக 3500 வரையான ஆதரவாளர்கள் இணைந்ததுடன் அது தொடர்பான கருத்து பரிமாற்றங்களையும் நடத்திவந்தனர் நேற்றும் இன்றும் முஸ்லிம் வாலிபர்கள் குறிப்பாக Facebook சமூக வளைத்தளம் பயன்படுத்தும் உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சியால் ‘பொக்கிஷம்’ என்ற தமிழ் திரைப்படம் ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டது.
Read more »

No comments: