வாசிப்புப் பழக்கம் ஒரு சமூகத்திற்கு குறிப்பாக ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மிகவும் அத்தியாவசியமானதாகும். நூலகங்கள் மனிதனது வாசிப்புத் தேவையை நிறைவு செய்வதற்கான மிக முக்கியமான இடமாகும். ஓவ்வொருவரும் தனக்குத் தேவையான நூல்களை வாங்குவதென்பதோ வீடுகளிலே நூலகங்களை அமைப்பதென்பதோ சாத்தியமான செயற்பாடுகளல்ல.
இந்த வகையில் பல இடங்களில் தனி நபர்களும் குழுக்களும் அமைப்புகளும் அரசாங்கமும் பொது நூலகங்களை அமைத்து மக்களது வாசிப்புத் தேவையை நிறைவேற்றி வருகின்றனர்.
எமது ஊரிலும் பாடசாலை மாணவர்களும் ஏனைய கற்கை நெறிகளைப் பின்பற்றுவோரும் பொது மக்களும் தமக்குத் தேவையான பாட நூல்கள் உசாத்துணை நூல்கள் மற்றும் பத்திரிகை சஞ்சிகை முதலானவற்றைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
இவ்வாறான மக்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக காலத்துக்குக் காலம் ஊரிலுள்ள இளைஞர்கள் பொது வாசிகசாலைகளை அமைத்து உதவி புரிந்து வந்திருக்pன்றனர். இந்த முயற்சிகள் மிக அண்மைக்கலம் வரை நிலையான கட்டட வசதி இல்லாமையினாலும் பொருளாதாரப் பிரச்சினைகளினாலும் வேறு பல காரணங்களினாலும் தோல்வியைத் தழுவிய வராறுகளையெ காணக் கூடியதாக இருக்கின்றது.
இந்த முயற்சிகளின் தொடராக அண்மைக்காலத்தில் ஊருக்குப் பொது வாசிகசாலையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் குழு நிலையான கட்டட வசதியின்றி இதை முன்னெடுத்துச் செல்ல முடியாது என முடிவு செய்து தனவந்தர்களின் உதவியுடன் அதற்கான காணியையும் பெற்றிருக்னகின்றனர்.
கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகளை தற்போது ஆரம்பித்துள்ள இவர்கள் இவ்விடயத்தில் ஆர்வமுள்ள தனவந்தர்கள் பொது அமைப்புகளிடமிருந்து பொருளாதார உதவிகளை எதிர்பார்க்கின்றனர். இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை அள்ளித் தரக்கூடிய இ.ந்த முயற்சிக்கு ஊர் மக்களும் வெளியூர் வாசிகளும் வாரி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு 1. மொஹமட் ரிஹான் 0771000772
2. மொஹமட் ரிபாஸ் 0755486081
2. மொஹமட் ரிபாஸ் 0755486081
No comments:
Post a Comment