இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் திரண்டு வந்திருந்த முஸ்லிம்கள் சனிக்கிழமை மாலையில் ஜனாதியைச் சந்தித்தனர்.அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கஹடோவிடவைச் சேர்ந்த 60 பேர் கலந்து கொண்டதாக ஸ்ரீ ல.சு.க. அமைப்பாளர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது தனது ஆடசிக் காலத்தில் முஸ்லிம்களுக்குச் செய்த பாரிய சேவைகளை நிறைவேற்றியதை நினைவு படுத்திய ஜனாதிபதி எதிர் காலத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வளமான எதிர்காலத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என தெரிவித்ததாக சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
திரண்டு வந்திருந்த முஸ்லிம்கள் ஜனாதிபதியால் நன்றாக உபசரித்து கௌரவிக்கப்பட்டனர். முஸ்லிம் தலைவர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment