Monday, February 8, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கஹட்டோவிட தேர்தல் காரியாலயம் மீது இரண்டாவது முறையாகவும் தாக்குதல்



ஜனாதிபதித் தேர்தலின் எதிர்க்கட்சி பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களால் கஹட்டோவிடவில் நடாத்தப்பட்டு வந்த தேர்தல் காரியாலயம் ஏற்கனவெ தீயிட்டுக் கொளுத்தப்பட்டமை தெரிந்ததே. இந்நிலையில் அக்காரியாலயத்தை மீண்டும் புணரமைத்து வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகைக்குப் பின்னர் ஐ.தே.க. மாகாண சபை உறுப்பினர் ஹர்ஷன ராஜகருன மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் நாஸர் ஆகியோரால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

எனினும் அதே தினம் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காடையர்களால் காரியாலயம் முற்றாக உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. சமாதானத்தை விரும்புகின்ற ஊர் மக்கள் இச்சம்பவத்தைக் கண்டிப்தோடு தேர்தல் காலங்களில் ஊரின் ஒற்றுமையைக் குழைக்கக் கூடிய செயல்கள் இடம் பெறுமோ என அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே காரியாலயம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகத் தெரிவிக்கின்றனர். அதே வேளை அச்சம்பவத்தைக் கண்டித்து ஜூம்ஆத் தொழுகைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டமொன்றும் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: