நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்
செயற்கை உயிரை உருவாக்கி ஆத்திகர்களின் முகத்தில் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர் என்று நாத்திகர்கள் குதூகலித்த நேரத்தில், தாங்கள் செயற்கை உயிரையெல்லாம் உருவாக்கவில்லை என்று அதிரடியாய் அறிவித்து, தன்னுடைய கையாலேயே நாத்திகர்களின் முகத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் கரியை பூசிவிட்டார் கிரேக் வென்டர். (செயற்கை உயிர் குறித்த இத்தளத்தின் பதிவை காண இங்கே சுட்டவும்)
இது சென்ற வருடம்.நடந்தது.
மறுபடியும் மண்ணை கவ்விய வேதனையில் நாத்திகர்கள் துவண்டு போயிருக்க, அவர்களை உற்சாகப்படுத்த நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள், சென்ற வருடம் செப்டெம்பர் மாதம் ஏழாம் தேதி (7th September 2010).
மறுபடியும் மண்ணை கவ்விய வேதனையில் நாத்திகர்கள் துவண்டு போயிருக்க, அவர்களை உற்சாகப்படுத்த நாள் குறிக்கப்பட்டது. அந்த நாள், சென்ற வருடம் செப்டெம்பர் மாதம் ஏழாம் தேதி (7th September 2010).
இந்த முறை அவர்களை உற்சாகப்படுத்த வந்தவர் ஸ்டீபன் ஹாகிங். Leonard Mlodinov என்பருடன் சேர்ந்து ஸ்டீபன் ஹாகிங் எழுதியிருந்த "The Grand Design" புத்தகம் மேலே குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
"இந்த பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவையில்லை. இயற்பியல் கோட்பாடுகளே போதுமானது" என்று அந்த புத்தகத்தில் ஹாகிங் வாதிடுவதாக செய்தி தீ போல பரவ, நாத்திகர்கள் மறுபடியும் உற்சாகமடைந்தனர்.
1 comment:
great site
Post a Comment