Monday, May 9, 2011

ஒசாமாவை கண்டுபிடிக்க முடியாதது சர்வதேச உளவுத்துறைக்கு பாரிய தோல்வி

 பாகிஸ்தானுக்கு தெரியாமல் பின்லேடன் மீது அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தது வருத்தம் அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
அத்துடன் அல் கொய்தா அமைப்பை ஒடுக்கிவரும் அமெரிக்கா சோவியத் யூனியனின் தலையீட்டின்போது அந்த அமைப்பை உருவாக்குவதற்கு உதவியதாகவும் பாக். பிரதமர் தனது உரையின் போது குற்றஞ்சாட்டினார். பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இந்த கொலையை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பின்லேடன் மரணம் குறித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் யூசுப் ராசா கிலானி உரையாற்றினார்.
Read more »

No comments: