Tuesday, May 3, 2011

பின்லேடன் மரணத்தில் சர்ச்சை

அமெரிக்கா வெளியிட்ட தகவல்களில் முரண்பாடு
பின்லேடன்தான் என்பது எப்படி உறுதியானது?

அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக காட்டப்பட்ட படங்கள் போலியானவை என்று Agence France Press தமது சிறப்புக் கணனி மென்பொருள் மூலம் நிரூபித்துள்ளது.
2009ம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த இணையத்தள பத்திரிகையில் பிரசுரமான படத்தைக் கொண்டு கணணியில் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக AFP புகைப்படங்க ளுக்கான தலைமை ஆசிரியர் மெலடன் அன்டனோவ் தெரிவித்துள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. ஒசாமா பின்லேடனின் மறைவிடத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஈரூடகப் படையினர் தாக்குதல் நடத்தி பின்லேடனை கைது செய்யும்படி ஒபாமா உத்தரவிட்டதாக பராக் ஒபாமா வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்படுகிறது.
Read more »

No comments: