இவர்களது இயற்பெயர் நுஃமான் என்பதாகும். அபூஹனீபா என்பது இவர்களது புனைப் பெயர். இவர்களின் தந்தையின் பெயர் தாபித். ‘இமாமுல் அஃலம்’ (கௌரவமிக்க தலைவர்) எனவோர் சிறப்புப் பெயர் இவர்களுக்கு வழங்குவதுமுண்டு. இவர்கள் இராக் தேசத்திலுள்ள கூபாவில் ஹிஜ்ரி 80- ல் (கி. பி 699) அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சியின்போது பிறந்தார்கள். ஹனபி மத்ஹபின் ஸ்தாபகரே இவர்கள்.
இவர்கள் நடுத்தர உயரமும், சிவப்புக் கலந்த வெண்மை நிறமும், அழகிய தோற்றமுடையவர்கள். இவர்களின் தவத்தையும், பூரண இறைபக்தியையும் பாராட்டாதோரிலர். இவர்கள் இராக் காலங்களில் முற்றிலும் தூங்காது அல்லாஹ்வை வணங்குவார்கள். தர்மம் செய்வதில் தலைசிறந்து விளங்கினார்கள். குடும்பச் செலவு போகத் தங்கள் பொருளில் எஞ்சியதைச் சேகரித்து ஏழைகள் முதலானோருக்குத் தினமும் அளித்து வந்தார்கள். இவர்கள் ஓரிடத்தில் மாத்திரம் 7000 விடுத்தம் குர்ஆன் ஓதிப் பூர்த்தி செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு கியாஸ் என்னும் ஒப்புமை ஆதார விதியால் சட்டங்கள் இயற்றுவதில் விசேஷ ஆற்றல் இருந்தது. அதேபோல் நாஸ்திகருடன் இவர்கள் விவாதித்து அன்னவர்களைத் தோல்வியுறச் செய்தார்கள்.
Read more »

No comments:
Post a Comment