Saturday, March 19, 2011

ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸெய்யதுனா அஹ்மது கபீர் ரிfபாயி ரலியல்லாஹு அன்ஹு


பிறப்பு
எமது ஆத்மீக ஞான ஆசிரியர், ஆலிமே ஷரீஅத், இமாமே தரீகத், ரிபாயி தரீக்காவின் ஸ்தாபகர், குத்புல் அக்தாப், ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையித் அஹ்மது கபீர் ரிபாயி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஹிஜ்ரி 512 ம் ஆண்டு ரஜப் மாதம் திங்கட்கிழமை 27 ம் நாள். ஈராக் நாட்டில் பஸ்ரா எனும் நகரில் அபூ உபைதா என்னும் ஊரில் பிறந்தார்கள்.

பிறப்பின் சிறப்பு
ஸுல்தானுல் ஆரிஃபீன் ஸையித் அஹ்மது கபீர் ரிபாயி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களின் தந்தையின் பெயர் அஸ்ஸையித் அபுல் ஹஸன் அலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) தாயாரின் பெயர் உம்முல் பரக்காத் பாத்திமா என்பதாகும். தந்தையார் அறிவும், ஆற்றலும், வணக்கமும், பொறுமையும் உடையவராகவும் இதை ஞானத்தின் மூழ்கியவராகவும் திகழ்ந்தார்கள். தாயார் சிறந்த பயபக்தியுடையவராகவும் திகழ்ந்தார்கள். கபீர் ரிபாயி நாயகம் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்களின் திருப்பேரர் இமாம் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பரம்பரையில் பிறந்தவர்கள்.
Read more »

No comments: