சமகால உலகில் ஆர்த்தொழுந்துள்ள இஸ்லாமிய எழுச்சியானது உலகில் முஸ்லீம்கள் பெருன்பான்மையாக வாழும் நாடுகளில் மட்டுமின்றி முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இஸ்லாத்தை சரியாகவும் தெளிவாகவும் விளங்குதல் வேண்டும் என்ற ஆர்வமும் அதன் போதனைகளை நடைமுறை வாழ்வில் செயல்படுத்தல் வேண்டும் என்ற துடிப்பும் சமூகத்தில் குறிப்பாக படித்த இளைஞர் மத்தியில் தோன்றியுள்ளது. இஸ்லாத்தின் விசுவாசக் கோட்பாடுகள் அதன் வணக்க வழிபாடுகள் கொடுக்கல் வாங்கள்கல் அதன் விதிமுறைகள் பற்றிய மயக்கங்கள் தெளிவின்மை தோன்றும் போது அதனை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளல் வேண்டும் என்ற ஆவல் பரவலாக இன்று சமூகத்தில் தோன்றியுள்ளது. இந்த இணையத்தளத்தில் WWW.MYISLAM.TK காணப்படும் வாசகர்களின் வினாக்கள் இந்த ஆர்வத்தினதும் வேட்கையினதும் பிரதிபலிப்பாகும்.
வாசகர்களின் வினாக்களுக்கு குர்ஆன், ஹதீஸ், இமாம்களின் சட்டத்தீர்ப்புகள், சமகால அறிஞர்களின் விளக்கங்களின் பின்னணியில் பரந்த மனப்பான்மையுடன் அவற்றை அணுகி இந்த இணையத்தளம் வழங்க தயராக உள்ளது. இவ்வாறு விளக்கப்படும் விளக்கங்கள் வெறுமனே சித்தாந்த ரீதியாக அமையாமல் நடைமுறை சாத்தியமானதாக அமைந்துள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.
இஸ்லாம் சட்டம் என்பது அசைவும் இயக்கமும் கொண்டது. சமூகங்களின் மாற்றங்கள், நிகழ்வுகள், புதுத்தேவைகள், அறைகூவல்கள் ஆகிய அனைத்தையும் சமாளித்து நொழிந்து கொடுத்து காலத்தோடு வளர்ச்சியைடையும் தன்மையை இஸ்லாமிய சட்டம் கொண்டுள்ளது. சில சட்டப்பிரச்சிணைகளுக்கான விளக்கங்களை வழங்குவதில் அறிஞர்கள் மத்தியில் பரஸ்பரம் வித்தியாசமான கருத்துக்கள் , அணு முறைகள் காணப்படுதல் இஸ்லாமிய சட்டத்தின் ஒரு முக்கிய பண்பாகும். அத்தகைய கருத்து வித்தியாசங்களை இஸ்லாம் வரவேற்பது மட்டுமின்றி சமூக ஆரோக்கியத்துக்கு அவசியமானதாகவும் கருதுகின்றது. இந்தப் பிண்ணனியில் இந்த இணையத்தளத்தின் விளக்கங்கள் நோக்கப்பட்டால் மேலோட்டமாக நோக்கும்போது சர்ச்சைக்குரியதாக தென்படும் சில விளக்கங்கள் பற்றி சில வாசகர்கள் பால் ஏற்படக்கூடிய மயக்கம் தவிர்க்கப்டலாம்.

இந்த இணையத்தளமானது உங்கள் கேள்விகளுக்கு தரமான பதில்கள் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆகையால் உங்களது கேள்வி மற்றும் பதில்களை kahatowita@live.com என்ற இணைய முகவரிக்கு அனுப்பி வையுங்கள். சமூகப்பிரச்சினைகளுக்கு நடுநிலைமையாக பதில்கள் கிடைக்கும்.
No comments:
Post a Comment