Wednesday, June 16, 2010

ஸாரலங்கா தோட்டத்தில் ஜூம்ஆப்பள்ளி?

  குரவலானையில் அமைந்தள்ள ஸாரலங்கா தோட்டத்தில் இருக்கும் சிறிய பள்ளிவாசலை விரிவாக்கி ஜூம்ஆப்பள்ளியாக மாற்றுவவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக நம்பகமாகத் தெரிய வருகின்றது. இந்த முயற்சியில் சாஹ_ல் ஹமீத் மௌலவி மற்றும் முஜீப் மௌலவி ஆகியோர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. இதுபற்றி குரவலான பிரதேசத்தில் வசிக்கின்ற சிலரிடம் விசாரித்த போதிலும் தெளிவற்ற பதில்களையே பெற முடிந்தது.

எனினும் குரவலான பிரதேசத்திற்கு ஏன் இப்போது ஜூம்ஆப்பள்ளி என்ற கேள்விக்கு முதலில் விடைகாண்பதோடு  ஊர் மக்களின் ஆழமான கலந்துரையாடல்கள் இது தொடர்பாக இடம்பெற வேண்டும் என்பதே அதிகமானோரின் கருத்தாக உள்ளது. ஊர் சம்பந்தப்பட்ட முடிவுகளை ஓரிருவரின் கையில் கொடுத்து விட்டு பார்த்துக் கொண்டிருப்பது அவ்வளவு நல்லதல்ல என்றும் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.


No comments: