Sunday, April 11, 2010

Kahatowita வில் இரத்த தான முகாம்

         கஹடோவிட Y.M.M.A. கிளையின் ஏற்பாட்டில் மூன்றாவது முறையாகவும் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய இரத்த தான முகாம் இன்று (2010.04.11) காலை 8.30 முதல் பி.ப. 1.30 வரை அல்பத்ரியா மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நிறைவு பெற்றது.
 
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனேகமானோர் வியாபார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்ருக்கும் நிலையில் இம்முகாமை இன்றைய தினம் நடாத்துவது சாத்தியமில்லை என்று Y.M.MA. நிர்வாகிகள் அறிவித்திருந்த போதிலும் வைத்தியசாலை நிர்வாகத்தின் விசேட வேண்டுகோளின் பேரிலேயே இம்முகாம் இன்று நடாத்தப்பட்டதாக தெரிய வருகின்றது. 

25 பேர்களையாவது பங்குபற்றச் செய்யுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டிருந்த போதிலும் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதோடு இதில் 33 பேர் இரத்ததானம் செய்தமை டாக்டருக்கும் தாதிமார்களுக்கும் மிகுந்த திருப்தியை அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிங்களப் பிரதேசங்களில் முகாம்களை ஏற்பாடு செய்ய முடியாதிருப்பதாலும் இரத்த வங்கியில் கையிருப்பு முற்றாக தீர்ந்திருக்கின்ற நிலையிலும் Y.M.M.A. யின் இந்த ஏற்பாடு தமக்கு மிகவும் பிரயோசமாக அமைந்ததாக இரத்த வங்கிக்குப் பொறுப்பான டாக்டர் குறிப்பிட்டார்.




1 comment:

M ZIAD said...

Well Done Y M M A Kahatowita