Tuesday, April 13, 2010

ஒபாமா வைத்த விருந்தில் மன்மோகனை சந்தித்து கை குலுக்கினார் கிலானி!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வைத்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, அவரிடம் கை குலுக்கி 5 நிமிடங்கள் பேசினார்.

அணு ஆயுதப் பாதுகாப்பு மாநாட்டுக்காக 47 நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு அதிபர் ஒபாமா விருந்தளித்துக் கெளரவித்தார்.

இதில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விருந்து நிகழ்ச்சியில் சற்று தள்ளி இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் அமர்ந்திருந்தனர்.

அப்போது கிலானி தனது இருக்கையிலிருந்து எழுந்து பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி வந்தார். அவரை பிரதமர் மன்மோகன் சிங் புனமுறுவலுடன் வரவேற்றார். இருவரும் ஹலோ சொல்லிக் கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு 5 நிமிடங்களே நீடித்தது.

ஹெட்லியிடம் விசாரணை: மேனன் ஆலோசனை

இந் நிலையில் மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லியிடம் இந்திய அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்துவது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேன்ன, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்சுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஹெட்லியை இந்தியாவிடம் விசாரணைக்கு ஒப்படைப்பது, இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.



No comments: