கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடகின்ற ஜனாதிபதியின் சகோதரரும் சிரேஷ்ட ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ அவர்கள் இன்றிரவு (2010.04.01) கஹடோவிடவுக்கு வருகை தந்தார்.

பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தில் இணைந்திருந்ததையும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மேற்குலகம் யுத்த தளபாடங்களை வழங்க மறுத்த நிலையில் சக்தி வாய்ந்த யுத்த தளபாடங்களை எமக்குத் தந்துதவிய ஒரே நாடு பாகிஸ்தான் என்பதையும் ஈரான் லிபியா போன்ற நாடுகள் இக்கட்டான பல சந்தர்ப்பங்களில் எமது நாட்டுக்கும் ஜனாதிபதிக்கும் கைகொடுத்து உதவிய சந்தர்ப்பங்களையும் நினைவு படுத்திப் பேசினார்.
அத்தோடு போலிக் குற்றச்சாட்டொன்றின் பேரில் அன்றைய ஐ.தே.க. அரசு ஜனாதிபதியைக் கைது செய்வதற்காக முயன்ற போது பல மாதங்களாக பாதுகாப்பில் வைத்திருந்தவர் சட்டத்தரணியான முஸ்லிம் நண்பரே எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான சிறந்த நட்புறவுடன் முஸ்லிம்களுடன் செயற்படுகின்ற ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள் அமோக ஆதரவு வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வாறான சிறந்த நட்புறவுடன் முஸ்லிம்களுடன் செயற்படுகின்ற ஜனாதிபதிக்கும் அரசுக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள் அமோக ஆதரவு வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


கூட்டத்தில் வேட்பாளர் சரண குணவர்த்தன மாகாண சபை உறுப்பினர் சந்தியா அத்தனகல்ல பிரதேச சபைத் தலைவர் உபுல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Share
1 comment:
develop kahatowita village now
Post a Comment