பிரெஸிலியாஇ ஏப்.16: ஐஸ்லாந்து எரிமலை சீற்றம் காரணமாக பிரேஸிலிலிருந்து இந்தியா திரும்பும் பிரதமர் மன்மோகன் சிங்கின் விமான பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரேஸிலிலிருந்து பிராங்க்பர்ட் விமான நிலையம் வழியாக புது தில்லி திரும்புவதாக முன்னர் பயண பாதை வகுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது ஐஸ்லாந்து எரிமலை சீற்றம் காரணமாக பயண பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரேஸிலிலிருந்து விமானம் தென்னாப்பிரிக்கா வழியாக தில்லிக்கு வரும். இதனால் பிரதமர் ஜோகன்னஸ்பர்க்கில் சிறிது ஓய்வெடுத்துவிட்டு பயணத்தைத் தொடர்வார்.
ஐஸ்லாந்து எரிமலை சீற்றம் காரணமாக நீண்ட தொலைவு விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாஇ பிரிட்டன் இடையே இயக்கப்படும் விமானங்களும்இ அமெரிக்காஇ கனடா ஆகிய நாடுகள் இடையே இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல வட ஐரோப்பிய விமானநிறுவனங்களும் தங்களது விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஏர் இந்தியாஇ கிங் ஃபிஷர்இ ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் இப்பிராந்தியங்களுக்கு இயக்கும் விமானங்களை ரத்து செய்துள்ளது. இவை அடுத்த 48 மணி நேரங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளன.ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் லண்டனுக்கு இயக்கப்படும் விமானம் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
ஹீத்ரூ விமான நிலையம் மற்றும் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் விமான கட்டுப்பாட்டு அமைப்பு சில பாதைகளில் விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. எரிமலை சீற்றத்தினால் அப்பகுதி வழியாக வரும் விமானங்களில் எரிமலை துகள்கள் படியும் அபாயம் இருப்பதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment