இந்த வசதியைப் பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுவே. எம்.எஸ். வர்டைத் திறந்து கொள்ளுங்கள். அடுத்து File மெனுவில் Open தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸின் வலப்புறம் உள்ள டூல் பாரில் Views பட்டனில் இருக்கும் சிறிய கீழ் நோக்கிய அம்புக் குறியில் க்ளிக் செய்ய ஒரு பட்டியல் தோன்றும் . அதில் Preview தெரிவு செய்யுங்கள். அப்போது அங்கு ப்ரிவியூ விண்டோ தோன்றும்,.
அடுத்து இடப்புறம் இருக்கும் எம்.எஸ். வர்ட் பைல் பெயர்களில் க்ளிக் செய்ய அந்த பைல்களில் என்னென்ன அடங்கியுள்ளன என்பதை அந்த பைல்களைத் திறக்காமலேயே பார்வையிடலாம்.
No comments:
Post a Comment