Friday, March 19, 2010

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் - 2010 கஹடோவிடவில் மூன்றாம் அணி உருவாவதற்கான சாத்தியம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனிக்கும் ஐக்கிய தேசிய முண்ணனிக்கும் சவாலாக கஹடோவிடவில் மூன்றாம் அணியொன்று உருவாவதற்கான சாத்தியம் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை மிகப்பெரும்பான்மையாக ஆதரித்த கஹடோவிட மக்கள் இத்தேர்தலில் என்ன முடிவை எடுப்பார்களென்பதை வெளிப்படையாக அறிய முடியாத நிலை காணப்படுகின்ற இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தலைமையில் களமிறங்கியிருக்கின்ற ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பை ஆதரிக்கவும் திரு. விஜித ஹேரத் அவர்களை அழைத்து பிரச்சாரக் கூட்டம் நடாத்தவும் ஒரு குழுவினர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்  ஏற்பட்டிருக்கின்ற நிலையைக் கவனத்தில் கொண்டு நாடு செல்கின்ற அரசியல் நீரோட்டத்தை பார்த்து களத்தில் இறங்குவதே ஊருக்குச் சிறந்தது எனப் பலர் பேசிக் கொள்வதையும் கேட்க முடிகிறது.

No comments: