ஜனாதிபதித் தேர்தல் எதிர் வரும் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நிலையில் ஊரில் சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கடைத் தெருவிலும் திருமண வீடுகளிலும் மக்கள் கூடுகின்ற எல்லா இடங்களிலும் தேர்தல் தொடர்பான கருத்துக்களே முக்கிய இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் டேபாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்ற ஐ.தே.க. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தேர்தல் காரியாலயத்தை அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். அதே வேளை ஜனாதிபதி மகிந்த ராஜபபக்ஷவை ஆதரிக்கின்ற ஸ்ரீ.ல.சு.க. ஆதரவாளர்களும் தேர்தல் காரியாலயத்தை வெகு விரைவில் ஆரம்பிக்கப் போவதாக தெரிய வருகின்றது.
தேர்தல் வெற்றி எவ்வாறு அமைந்தாலும் ஒற்றுமையாகவும் மக்களது சுதந்திரத்தைப் பாதிக்காத வகையிலும் ஊர் மக்கள் விசேடமாக கட்சி ஆதரவாளர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்பதே அனேகரின் கருத்தாகும்.
No comments:
Post a Comment