கஹட்டோவிட்டவில் அமைக்கப்பட்டடிருந்த சரத் பொன்சேகாவின் தேர்தல் காரியாலயம் ஜனாதிபதியின் ஆதரவாளர்களான குண்டர்களால் நேற்றிரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு இரு பிரதான வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தேர்தல் காரியாலயங்களை அமைத்து செயற்பட தயாராகி வந்தனர். ஊரிலுள்ள ஜனாதிபதிக்கு ஆதரவான தேர்தல் காரியாலயம் நேற்றிரவு திறந்து வைக்கப் பட்டதாகவும் இந்த நிகழ்வின் பின்னர் நள்ளிரவு நேரத்தில் தமது காரியாலயம் குண்டர்களால் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளதாகவும் சோடனைகள் அனைத்தும் உடைத்தெரியப்பட்டுள்ளதாகவும் ஐ.தே.க. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அரசியல் அபிலாசைகள் வேறுபட்டிருந்தாலும் ஊர் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது பார்த்துக் கொள்வதும் பொறுமையோடு நடந்து கொள்வதும் முக்கியமானது என ஒற்றுமையை விரும்புகின்ற ஊர் மக்கள் கவலையுடன் பேசிக் கொள்வதை அறிய முடிகின்றது.
No comments:
Post a Comment