கம்பஹ மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான சாபி ரஹீமிடம் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் கமால் அப்துல் நாஸர் மு.கா. உறுப்பினர்களான அல்ஹாஜ் M.N.M. ஜௌஸி அல்ஹாஜ் A.M.M.ஜிப்ரி மற்றும் மாகாண சபை வேட்பாளர் A.R.M. ரிஸான் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கஹட்டோவிட்டாவில் பின் வரும் அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டன.
1. கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வத்தியாலயத்துக்கு ரூ. 100000.00 பெறுமதியான போடடோ பிரதி இயந்திரம் பெற்றுக் கொடுத்தல்
2. கஹட்டோவிட்ட தௌஹீத் பள்ளிவாசலக்கு முன்னால் செல்லும் யால்கொடதெனிய பாதையை ரூ. 100000.00 செலவில் கொங்கிறீட் இட்டு புணரமைத்தல்
3. கஹட்டோவிட்ட இல்மா பாலர் பாடசாலைக்கு முன்னால் செல்லும் ஓகொடபொல பாதையை ரூ. 100000.00 செலவில் கொங்கிறீட் இட்டு புணரமைத்தல்
மேற்படி அபிவிருத்தித் திட்டங்களை தனது 2009ஆம் ஆண்டுக்கான பன்மகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பெற்றுத் தந்தமைக்காக பிரதேச சபை உறுப்பினர் நாஸர் மாகாண சபை உறுப்பினருக்க பிரதேச மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment