Thursday, February 11, 2010

சிறப்பாக நிறைவுற்ற அல் பத்ரியா விளையாட்டுப் போட்டி


அல் பத்ரியாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் அதிபர் M.I.M. ரிஷான் அவர்களின் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது. இன்று (2010.02.11) குருந்தூர ஓட்ட நிகழ்ச்சிகள் அஞ்சலோட்ட நிகழ்ச்சிகள் மற்றும் மாணவிகளின் DRILL DISPLAY நிகழ்ச்சியும் இடம் பெற்றன.

ஆங்காங்கே மாணவர்கள் ஒழுக்கம் குறைவாக நடந்து கொண்டமை வேதனையைத் தருவதாக அமைந்தது. ஆசிரியர்களுக்குக் கட்டுப்படாமல் மாணவர்கள் நடப்பதைத் தவிர்க்க பெற்றோர் தமது பிள்ளைகளை வளர்ப்பதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதை உணர்த்துகின்றது.

நஜூம் கமர் சம்ஸ் ஆகிய இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டதோடு விளையாட்டுப் போட்டியின் இறுதிப் பெறுபேறு இதோ…..

முதலாம் இடம்   கமர் இல்லம்   பெற்றுக் கொண்ட புள்ளிகள்         307
இரண்டாம் இடம்  சம்ஸ் இல்லம்  பெற்றுக் கொண்ட புள்ளிகள்     301
மூன்றாம் இடம்   நஜூம் இல்லம்  பெற்றுக் கொண்ட புள்ளிகள்     280

No comments: