கஹடோவிட தாய்மார் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்து(CLINIC)க்கு சுமார் 75000 ரூபா செலவில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினால் (IIRO)கிணரொன்ற அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்நிலையத்துக்கு குவைத் மாணவர் தொழிலாளர் சங்கத்தினால் (KSWA)நீண்ட நாட்களுக்கு முன்னர் கிணரொன்று அமைத்து நீர் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்த போதும் ஒழுங்கான பராமரிப்பு இன்மையினால் அக்கிணறு சேதமடைந்திருந்த நிலையில் அயல் வீடுகளிலிருந்து தண்ணீர் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையத்துக்கு வருகின்ற டாக்டர்களும் தாதிமார்களும் பொது மக்களும் தண்ணீர் பற்றாக்கறையினால் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. கிணறு அமைக்கப்பட்டிருந்த போதும் அதனைப்பயன்படுத்துவதற்கான வசதிகள் குறைபாட்டினால் தொடர்ந்து நீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையினால் ஊர் மக்களின் உதவி தேவைப்படுவதாக நிலையத்தக்குப் பொறுப்பான தாதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விடயத்தில் அக்கறையுள்ள சிலர் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment