கடந்த இரண்டு வாரங்களாக ஊரின் வீதியருகே கொட்டப்பட்டுள்ள குப்பை அள்ளப்படாததால் துர்நாற்றம் வீசத் தொடங்கியிருக்கின்றது. இதனால் பாதையில் செல்கின்றவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். பல இடங்களில் குப்பை, மேடுகளாகக் காட்சி தருவதால் அருவருப்பாக இருப்பதோடு சுகாதாரச் சீர்கேடுகளும் ஏற்படுமென அச்சம் நிலவுகின்றது. இதுபற்றி பொறுப்புவாய்ந்தவர்கள் கவனம் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் ஊரில் பெரும்பான்மையானவர்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்காமையினாலேயே பிரதேச சபையினால் குப்பைகள் அள்ளப்படாமலிருப்பதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. குப்பை அள்ளுகின்ற தொழிலாளரிடம் கேட்ட போது குப்பை வண்டிச் சாரதி கை முறிந்த நிலையில் சுகவீனமுற்றிருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எது எவ்வாறாயினும் ஊர் மக்கள் பிரதேச சபைக்கு வரி செலுத்துவதால் இப்பிரச்சினையை அரசியலாக்காமல் அவசரமாகத் தீர்வு காண்பது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்.
விஷேடமாக அல்பத்ரியா பாடசாலைக்கு முன்னாலும் பாலர் பாடசாலை மற்றும் ஏனைய சந்திகளிலும் நிறைந்து கிடக்கின்ற குப்பைகளால் சிறுவர்கள் பாதிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு அடியானுக்கு இடைஞ்சல் தரக்கூடிய பொருளை பாதையிலிருந்து அகற்றுவது. ஈமானின் இறுதி நிலை என நமது மார்க்கம் சொல்லியிருக்க பாதையில் செல்பவர்களுக்கு இடைஞ்கலை ஏற்படுத்துகின்ற பொருட்களை பாதையில் கொண்டுவந்து போடுவதைப்பற்றியும் சிந்திக்க வேண்டீயுள்ளது.
No comments:
Post a Comment