Wednesday, January 12, 2011

ஜனாப் M.M. மொஹமட் பிரதி தேர்தல்கள் ஆணையாளராக பதவி உயர்வு

கம்பஹா மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளராக கடந்த ஏழு ஆண்டுகளாக கடமையாற்றிய கஹடோவிடவைச் சேர்ந்த ஜனாப் M.M. மொஹமட் அவர்கள் பிரதி தேர்தல்கள் ஆணையாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு கொழும்பு தேர்தல்கள் திணைக்கள தலைமையகத்தில் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இப்பதவியுயர்வு வழங்கப்பட்டதோடு கம்பஹா மாவட்டத்தில் பதில் தேர்தல்கள் உதவி ஆணையாளராக கடமையாற்றி வந்தார். 2011 ஜனவரி முதல் கம்பஹா மாவட்டத்திற்கு புதிய உதவி ஆணையாளர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் கொழும்பு அலுவலகத்தில் முழு நேரக் கடமையை மேற்கொண்டு வருகின்றார். கஹடோவிட அல் பத்ரியா ம.வி. இன் பழைய மாணவரான இவர் இலங்கை நிர்வாக சேவையில் 20 வருட காலமாக சேவையாற்றி வருவதோடு தற்போது இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரி என்பதும் குறிப்படத்தக்கது.
இவர் மொனராகல பதுளை கம்பஹா மற்றும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலும் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: