Friday, January 28, 2011

ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு விட்டுச் செல்லப்பட்ட ஆபத்துதான் இந்த கிரிக்கெட் என்று சொன்னால் மிகையாகாது.

எந்த வித பலனுமில்லாத நேரத்தை வீணடிக்கிற, அறிவுக்கு சம்பந்தமில்லாத, சூதாட்டத்தை ஊக்குவிக்கிற, நாட்டின் முன்னேற்றப்பாதையில் வளர்ச்சியில் தடை போடுகிற, ஆபாசத்தை தூண்டுகிற (Cheer Girls), ஆரோக்கியத்துக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு விளையாட்டையும் இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு விட்டுச் செல்லப்பட்ட ஆபத்துதான் இந்த கிரிக்கெட் என்று சொன்னால் மிகையாகாது.
1.தொழுகையை விடக்கூடிய நிலை
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும்போது தொழுகையைப் பற்றித்தான் முதன்முதலாக விசாரிக்கப்படும்’ (அபூதாவூது
2. வீண் செலவுகள் பண விரயம்
’முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘மறுமை நாளில், நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரையில் ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. அவற்றில் ஒன்றுதான் சம்பாதித்த பணத்தை எவ்வாறு செலவு செய்தாய்…’ (திர்மிதி)

மேலும் இளைஞர்களே! இறைவன் கூறுவதுபோல் வீண் செலவுகள் செய்து ஷைத்தானின் சகோதரர்களாகி விடாதீர்கள்.

“நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவனாக இருக்கின்றான்” (17:27)
3.பணம் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை
“ (செல்வத்தையும், மக்களையும்) ஒருவருக்கொருவர் அதிகமாகத் தேடிக்கொள்வது உங்களைப் பராக்காக்கிவிட்டது” (102:1).
4. பொழுதுபோக்கு
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் நேரத்தை எவ்வாறு செலவழித்தாய் என்ற கேள்விக்கு பதில் சொல்லாத வரை ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது’ (திர்மிதி
5.உடல் ஆரோக்கியம்
இறைவன் திருமறையில், ‘இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்’ (2:185)
6.சூதாட்டம்
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்’ (5:90)
7.ஆடைகுறைப்பு அழகிகள்
‘கண்கள் செய்யும் விபச்சாரம் பார்ப்பது’ என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். (புஹாரி 609)

இறைவன் திருமறையில் ‘(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்’ (24:30)

No comments: