2011ஆம் ஆண்டில் கஹடோவிடவில் இருந்த வழமையை விடக் கூடுதலான ஆண் பிள்ளைகள் மத்ரஸாக் கல்விக்காகச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. இம் முறை சுமார் 10க்கும் மேற்பட்ட மானவர்கள் பறகஹதெனிய காலி மஹரகம சியம்பலாகஸ்கொட்டுவ போன்ற பிரதேசங்களில் உள்ள மத்ரஸாக்களுக்கு குர்ஆன் மனனம் மற்றும் சரீஆ பிரிவுகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பாடசாலைக் கல்வியும் இம்மத்ரஸாக்களில் போதிக்கப்படுவதால் மாணவர்களும் ஆர்வமாக இருப்பதோடு பெற்றோரும் மிக விருப்பத்துடன் பிள்ளைகளை அனுப்பி வருகின்றனர். சில பெற்றோரிடம் இதுபற்றி கேட்ட போது பாடசாலையிலும் கல்வி வளர்ச்சியும் ஒழுக்கமும் மிகவும் குன்றிப் போயுள்ள நிலையில் இம்முடிவை எடுக்க வேண்டியேற்பட்டதாகத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment