Tuesday, January 18, 2011

அல் பத்ரியாவில் முதலாம் வகுப்பு மாணவர் அனுமதி – பாண்ட் வாத்தியத்தடன் புதிய மாணவர்கள் வரவேற்பு 2011

அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் 2011ஆம் ஆண்டுக்கான முதலாம் வகுப்பு மாணவர் அனுமதி 2011 ஜனவாரி 18 திகதி கோலாகலமாக நடைபெற்றது. புதிய மாணவர்களை  ஆசிரியர்களும் மாணவர்களும்  பாடசாலை முன் வாயில் அருகாமையிலிருந்து பாண்ட் வாத்தியத்துடன் அழைத்துச் சென்றனர். பாடசாலைக்குள் பிரவேசித்த புதிய மாணவர்களை இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வரவேற்று வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றனர். 
 
இம்முறை அல்பத்ரியாவின் முதலாம் வகுப்புக்கு மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது விஷேட அம்சமாகும். மொத்தமாக இம்முறை 70 மேற்பட்ட மாணவ மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.

இந்த நிகழ்வில் பெற்றோர் பழைய மாணவாகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments: