Wednesday, December 29, 2010

பரீட்சை வினாத்தாள் குறைவாக வந்ததால் மாணவர்களுக்கு அசௌகரியம்

இப்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 2010.12.16 ஆம் திகதி நடைபெறவிருந்த விஞ்ஞானப் பாடத்தின் முதல் பகுதிக்கான வினாத்தாள்கள் குறைவாக வந்திருந்ததால் பரீட்சையை சுமார் 1 ½  மணி நேரம் தாமதித்த நடாத்த வேண்டியேற்பட்டது.
அல் பத்ரியா மகா வித்தியாலய பரீட்சை நிலையத்தில் 144 பரீட்சார்த்திகள் தோற்றுகின்ற போதிலும் விஞ்ஞானப் பாடத்தின் முதல் பகுதிக்கான வினாத்தாள்கள் 44 மட்டுமே கிடைக்கப் பெற்றிருந்தன. பரீட்சை நிலையத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக மேற்கோண்ட நடவடிக்கைகள் காரணமாக 100 வினாத்தாள்கள் பூகொடைப்பகுதியில் உள்ள நிலையமொன்றுக்கு அனுப்பப் பட்டிருப்பது தெரிய வரவே இரண்டு உத்தியோகத்தர்களை அங்கு அனுப்பி வினாத்தாள்களைப் பெற்ற பின்னரே பரீட்சையை ஆரம்பிக்க முடிந்நது.
பி.ப. 12.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய பரீட்சை 2.00 மணிக்கே ஆரம்பிக்கப்பட்டது. பரீட்சார்த்திகள் அனைவரும் அதுவரை பரீட்சை நிலையத்திலிருந்து வெளியெற அனுமதிக்கப்படவில்லை
பரீட்சை நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது பரீட்சைத் திணைக்களத்தில் வினாத்தாள்களைப் பொதி செய்கின்ற போது ஏற்பட்ட தவறாலேயே இந்நிலை ஏற்பட்டதாகக் கூறினார்.
இதே வேளை உடனடியாக அல் பத்ரியா மகா வித்தியாலயத்துக்கு வருகை தந்த  News First ஊடகவியலாளர்கள் இவ்விடயம் தொடர்பான தகவல்களை அறிந்து அதே தினம் சிரச சக்தி தொலைக்காட்சிகளில் செய்திகளை ஒளிபரப்பின. அத்தோடு இச்செய்தி தமிழ் சிங்கள தேசியப் பத்திரிகைகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

Share online counter

2 comments:

Anonymous said...

உண்மையில் பாடைசாலையில் ஆசிரியர்களின் நிலை உண்மையில் பரிதாபமாணது என்றாலும் கூட ஆசிரியர்களுக்கு எந்த விதமாக கடமைப்பாடும் இல்லை. மாணவர்களை நல்ல நிலைமைக்கு கொணடுவருவதற்கு இந்த நிலமை பாடசாலையில் நிச்சயமாக மாற வேண்டும் ஏனனில் எதிர்காலத்தில் மாணவர்கள் தான் நிர்வாகிகள். என்பதனால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இதனைக்கவனத்தில் கொண்டுவருதல் வேண்டும்

பவாஸ் கானா said...

பாடசாலையில் ஆண் மாணவர்களின் கல்வி நிலை மிக பின்தல்லப்பட்டுள்ளது. இதனை sds , welfare கண்கானிப்பதில்லை என்றாலும் இவ்வாறான sds , welfare பாடசாலைக்குத் தேவை தானா? பாடசாலை நிர்வாகிகல் என்பது ஒரு சமூகத்தை நிர்வகிப்பவர்கள் . இதனைக்கூட கருத்தில் கொள்ளாத பாடசாலை உருப்பினர்கள் தேவை தானா?..............