Thursday, December 9, 2010

க.பொ.த சாதாரண தர மாணவர்கள் பிரியாவிடை நிகழ்ச்சி

இம்முறை அல் பத்ரியாவிலிருந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்கள் பிரியாவிடை நிகழ்ச்சியொன்றை நேற்று (2010.12.02) பாடசாலையில் ஏற்பாடு   செய்திருந்தனர். இந்நிகழ்வின் போது பாடசாலைக்கு இம்மாணவர்களால் ஒலிபெருக்கி உபகரணமொன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒருமாணவரிடம் தலா ரூ.300.00 வீதம் சேகரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
தங்களத பிள்ளைகளின் கல்விக்காக பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் செலவுகளை செய்த பெற்றோர் பிள்ளைகளின் ஆசைக்காக இது போன்ற செலவுகளையும் செய்கின்ற போது மாணவர்களும் தமது பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதன்மூலம் நிறைவேற்ற வேண்டும் என பலர் கருத்துத் தெரிவித்தனர்.
பரீட்சைக்கு முன்னர் தமது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாவிடை நிகழ்ச்சிகளை நடத்துகின்ற மாணவர்களில் பலர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் கல்விக்கே முற்றுப்புள்ளி வைக்கின்ற சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் சில ஆசிரியர்களும் பெற்றோரும் ஆதங்கப்பட்டதையும் காண முடிந்தது.
மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று அவர்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதோடு பாடசாலைக்கும் ஊருக்கும் நற்பெயர் பெற்றுத் தரவேண்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்


Share online counter

No comments: