Wednesday, December 29, 2010

வலுவான இஸ்லாமிய ஊடகம் தேவை - ஒ.ஐ.சி பொதுச்செயலாளர்

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை எதிர்கொள்ள வலுவான ஊடகம் தேவை இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் (organisation of islamic countries) பொதுச் செயலாளர் பேராசிரியர் இக்மலுத்தீன் இஹ்ஸானோக்லு தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிக் ப்ரோட்காஸ்டிங் யூனியனின்(ஐ.பி.யு) பொது அவைக் கூட்டத்தில் உரையாற்றினார் இக்மலுத்தீன்.

ஊடக உலகின் வேகமான வளர்ச்சிக்கொப்ப செயல்படுவதற்கு இஸ்லாமிய ஊடகங்கள் வீழ்ச்சியடைந்துவிட்டன. 2005 ஆம் ஆண்டு சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் முயற்சியில் மக்காவில் நடந்த ஒ.ஐ.சி மாநாட்டில் ஐ.பி.யு போன்ற ஒ.ஐ.சி ஊடகங்களையும், சர்வதேச இஸ்லாமிய செய்தி ஏஜன்சியையும்(ஐ.ஐ.என்.எ) வலுப்படுத்த அழைப்பு விடுத்திருந்தது என இக்மாலுத்தீன் தெரிவித்தார்.

சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளையும், விருப்பங்களையும் எதார்த்தமாக்கும் விதத்தில் ஐ.பி.யு வை வலுப்படுத்த வேண்டுமென சவூதி அரேபியாவின் கலாச்சார செய்தி தொடர்பு துறை அமைச்சர் அப்துல் அஸீஸ் கோஜா தெரிவித்தார்.

உலக தரம் வாய்ந்த ரேடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிக்க அவர் ஒ.ஐ.சி நாடுகளின் உதவியை கோரினார். ஒ.ஐ.சியின் தலைமையகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஐ.பி.யுவின் புதிய பொதுச் செயலாளராக மலேசியாவின் ஸைனுல் ஆப்தீன் இப்ராஹீம் தேர்ந்தெடுக்கப்பட்டார்

Share online counter

No comments: