இங்கிலாந்து- அவஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டிக்கான 12 பேர்கொண்ட ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விரல் காயத்திற்கு உள்ளாகியுள்ள அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதில் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட உஸ்மான் குவாஜா சேர்க்கப்பட் டுள்ளார்.
இதன்மூலம் அவர் 5ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. எனவே, ஆஸி அணிக்காக டெஸ்ட் விளையாடும் முதல் முஸ்லிம் வீரராக குவாஜா சாதனை படைப்பார்.
அதே போன்று இந்த டெஸ்டில் மைக்கல் கிளார்க் ஆஸி. அணியின் தலைவராக செயற்படவுள்ளார். கிளார்க் ஆஷஸ் டெஸ்டுக்கு தலைமை தாங்கும் முதல் சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.
இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது
No comments:
Post a Comment