கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயாதரப்பரீட்சைக்குத் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்திலிருந்து கலைத்துறையில் 18 மாணவர்கள் தோற்றினர். இவர்களுல் 3 மாணவிகள் இம்முறையும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்டுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறந்த பெறு பேறாக 2A, B பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வழமை போன்று ஆண் மாணவாகள் எவரும் பல்கலைக்குத் தெரிவு செய்யப்படாமை மாணவர்களின் கல்வியின் மீதான நம்பிக்கையை குறைத்துள்ளதாக பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். எது எப்படியிருப்பினும் மாணவர்களை கல்வியின்பால் ஊக்கப்படுத்தவதற்கான ஒரு செயற்திட்டத்தை புத்திஜீவிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் உருவாக்க முயற்சிப்பது காலத்தின் தேவையாகும்
1 comment:
இவர்கள் பாடசாலையில் படிக்கவில்லை இவர்கள் பாடசாலையில் உதவி அதிபர்களாக பணி புரிந்தார்கள் பாவம் இவர்களின் நிலை .....
Post a Comment