Tuesday, November 16, 2010

பள்ளிவாசல்கள் சம்மேளனம் தமது நடவடிக்கைகளை மிக விரைவில் ஆரம்பிக்கும்

  கஹடோவிட ஓகொடபொல பள்ளிவாசல்கள் சம்மேளனம் கடந்த வாரம் தனத கூட்டமொன்றை தாருஸ்ஸலாமில் நடத்தியது. அப்போது ஊர் ஜமாஅத்தார்களுக்கான சரியான வழிகாட்டல்களை நடைமுறைப் படுத்தவது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும் ஒவ்வொரு விடயமாக மக்கள் மத்தியில் தெளிவு படுத்தி ஊர் மக்களின் பூரண ஆதரவுடன் செயலாற்ற முடிவு செய்ததாகவும் அறியக் கிடைத்துள்ளது.

ஊரில் கடைகள் மற்றும் வீடுகளை வெளியாருக்கு வாடகைக்குக் கொடுப்பது தொடர்பில் சில ஒழுங்குகளை மிக விரைவில் செயற்படுத்துவதென அன்றைய கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. ஆதனடிப்படையில் அது தொடர்பான விடயங்கள் மிக விரைவில் ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share online counter

No comments: