கஹடோவிட கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்ற பாதை மிக ஒடுக்கமாக இருப்பதால் மக்கள் பல அசௌகரியங்களை அனுபவித்து வருவதும் பாதையை அகலமாக்குவோம் என்ற வாக்குறுதிகள் காலத்தக்குக் காலம் வழங்கப்படுவதும் தெரிந்த கதைகளே. ஆனால் அண்மைக்காலமாக இப்பாதையை அகலமாக்கி மக்களுக்கு இருக்கின்ற சிரமங்களை நீக்குவதாகக் கூறி கையொப்ப வேட்டையொன்று நடந்ததும் அனைவருக்கும் தெரியும். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்டமையும் சிலர் எதிர்த்து விலகி நின்றமையும் அனேகர் அறியாதிருக்கலாம்.
இந்நிலையில் பாதை விஸ்தரிப்பு சம்பந்தமாக உத்தியோகப+ர்வமாக எந்த நடவடிக்கையுளும் எடுக்கப்படவில்லையென்பது இப்போது தெரிய வந்துள்ளது. ஊர் மக்கள் எமது பாதையை அகலமாக்குவதற்காக நாமே விரும்பி எமது வீடுகளையும் காணிகளையும் அர்ப்பணிக்கத் தயாராக உள்ளதாக கையொப்பமிட்ட கடிதம் சில அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்தள்ளது. அதனடிப்படையில் இந்தப் பாதையை அகலமாக்குவதற்கு எந்த விதமான நிதியும் ஒதுக்கப்பட்டோ அல்லது அதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டோ இல்லை.
தாமாக முன்வந்து உடைக்கச் சொன்ன வீடுகளையும் கடைகளையும் உடைப்பதற்காக உரிய இயந்திரங்களை வழங்குவதாக வாயளவில் கூறப்பட்டிருக்கின்றது.
ஆனால் கையொப்பம் வாங்கியவர்கள் வீடுகளையும் கடைகளையும் உடைத்தால் அதற்கு நஸ்டஈடு வழங்குவதைப் போன்றும் வீதி உடனடியாகத் திருத்தி அமைக்கப்படவது போன்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தனர். கட்டடங்கள் உடைக்கப்பட்டால் தானாக வீதி அகலமாகும். உடைத்த கட்டடங்களை உரியவர்கள் எப்படியோ கட்டிக் கொள்வார்கள் என்பது அவர்களது வாதம்.
நாளாந்த வாழ்வையே ஓட்டச் சிரமப்படும் மக்களுக்கு இந்தச் சுமையையும் சுமத்துவது அநியாயமில்லையா
பாதைகள் பெரிதாக்கப்பட வேண்டும். ஊர் அபிவிருத்தியடைய வேண்டும் அதே போன்று ஊர் மக்களது பிரச்சினைகளும் நேர்மையாக அனுகப்பட வேண்டும். நம்ப வைத்த ஏமாற்றுவது பெரிய அநியாயம்.
நாளாந்த வாழ்வையே ஓட்டச் சிரமப்படும் மக்களுக்கு இந்தச் சுமையையும் சுமத்துவது அநியாயமில்லையா
பாதைகள் பெரிதாக்கப்பட வேண்டும். ஊர் அபிவிருத்தியடைய வேண்டும் அதே போன்று ஊர் மக்களது பிரச்சினைகளும் நேர்மையாக அனுகப்பட வேண்டும். நம்ப வைத்த ஏமாற்றுவது பெரிய அநியாயம்.
இந்த விடயங்களை மக்கள் மத்தியில் விளக்கிச் சொல்வது பாதை அகலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டடுள்ளவர்களின் பொறுப்பல்லவா?

No comments:
Post a Comment