சிகரட் விற்பனையை தவிர்ந்துகொள்ளுமாரு வேண்டி கடந்த சில நாட்களிற்கு முன்னர் கஹட்டோவிடாவின் கடைகளிற்கு ஒரு அநாமேதயத் துண்டுப்பிரசுரம் போடப்பட்டிருக்கிறது. சிகரட் விற்பனையால் ஏற்படும் பாதிப்புக்களை உணர்த்தி எமதூரின் இளைய தலைமுறையினரை புகைக்காத ஒரு சமூகமாக உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் அதன் வாசகங்கள் அமைந்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. (இத்துண்டுப் பிரசுரத்தின் நிழற்படம் இணைக்கப்பட்டுள்ளது). இது இப்படியிருக்க கடந்த சில நாட்களிற்கு முன்னர் தடை செய்யப்பட்ட சிகரட் வகையை விற்பனை செய்த குற்றத்திற்காக எமதூரின் ஒரு வியாபாரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்துண்டுப்பிரசுரத்தின் இறுதியில் நலன் விரும்பும் ஊர்வாசிகள் என்று ஒப்பமிடப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.
No comments:
Post a Comment