Thursday, October 21, 2010

அல் பத்ரியா பாலிகா ஆசிரியர்கள் பலருக்கு இடமாற்றம்

  கஹடோவிட அல் பத்ரியா மற்றும் பாலிகா வித்தியாலய ஆசிரியர்கள் பலருக்கு வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து இடமாற்ற உத்தரவு வந்திருக்கின்றது. நீண்ட காலமாக இவ்விரு பாடசாலைகளிலும் கடமையாற்றியவர்களுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. இவ்விரு பாடசாலைகளில் மாத்திரமன்றி கம்பஹா வலயத்திலுள்ள திஹாரிய உடுகொட ஓச்சட்வத்த மற்றும் பூகொட ஆகிய பாடசாலை ஆசிரியர்களுக்கும் இதே போன்று இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது. எதிர்வரும் 2011 ஜனவரி 01ஆம் திகதியிலிருந்து இந்த இடமாற்றங்கள் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share online counter

No comments: