Thursday, October 21, 2010

மனதை அறியும் நவீன இயந்திரம்!

மனித எண்ணங்களை வார்த்தையாக மாற்றக்கூடிய புதிய இயந்திரத்தை உட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.
மேற்படி இயந்திரமானது மனித மூளையின் சமிக்ஞைகளை வார்த்தைகளாக மாற்றக்கூடியது.
இது விஞ்ஞான உலகில் புதிய மைல் கல்லெனவும் இதன் செயற்பாடுகள் 90மூ சரியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ் இயந்திரத்தின் சென்சர்கள் மண்டையோட்டின் கீழ் பகுதியில் அதாவது மூளையின் மேற்பரப்பில் இணைக்கப்பட்டிருக்கும்.
இதன் மூலம் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுப் பேச முடியாதவர்களின் எண்ண ஓட்டத்தினை அறிந்து கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
இது முன்னைய கண்டுபிடிப்புக்களை விட அதிநவீனமானதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share online counter

No comments: