Tuesday, October 26, 2010

பெண் பலதார மணம் புரியக் கூடாதது ஏன்? ஒரு வரலாற்றுப் படிப்பினை



இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதில் பக்க சார்புடன் நடந்துகொள்கின்றது அல்லது உரிமைகளை வழங்குவதில்லைஎன விமர்சனம் செய்யும் பலரும் முன்வைக்கும் ஒரு கேள்விதான் ஏக காலத்தில் ஆண்கள் நான்கு பெண்களைத் திருமணம் முடிக்க இயலுமாயின் ஏன் அவ்வுரிமையைப் பெண்களுக்கு வழங்குவதில்லை?” என்பது.

இக்கேள்விக்கான யதார்த்தபூர்வமான பதிலை இஸ்லாமிய மார்க்க அறிஞர் இமாம் அபூ ஹனீபா அவர்களது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து விளங்கிக்கொள்ளலாம். ஒரு தடவை இரண்டு பெண்கள் இமாம் அபூ ஹனீபா அவர்களிடம் வந்து ஆண்கள் ஏக காலத்தில் நான்கு பெண்களை மணமுடிக்க முடியுமாயின் ஏன் எம்மால் மாத்திரம் முடியாது? ஏன் எமக்கு அவ்வுரிமையை வழங்குவதில்லை?” என்று கேட்டனர். இதற்குப் பதில்கூற இமாமவர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கும் போது இமாமவர்களின் மகன் ஹனீபா தந்தையின் முன் வந்து இவ்வாறு கூறினார்.

தந்தையே! இக்கேள்விக்கான விடையை நான் கூறுகின்றேன். என் விடை சரியானதாக இருந்தால் இனிமேல் நீங்கள் உங்களை அபூ ஹனீபா - ஹனீபாவின் தந்தை- என்றுதான் எங்கும் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.என்றார். தந்தையும் சம்மதித்துவிட்டார். அவ்விரு பெண்களின் முன்வந்த இமாமவர்களின் புதல்வன் ஹனீபா அவ்விருவருக்கும்; இரண்டு கிணறுகளிலிருந்து  இரு கோப்பைகளில் நீர் கொண்டுவருமாறும் அதோடு ஒரு குடத்தையும் எடுத்துவருமாறும் கூறினார்.

வ்வாறே அவ்விருவரும் அவற்றைக் கொண்டுவந்ததும் அக்கோப்பைகளிலிருந்த நீரை அக்குடத்திலே ஊற்றுமாறு கூறினார். அவர்களும் ஊற்றிவிட்டனர். பின்பு ஹனீபா கூறினார் தற்போது நீங்கள் இருவரும் கொண்டுவந்த இரண்டு கிணற்று நீரையும் மீண்டும் வேறாக்கி உங்களது கோப்பைகளுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்என்றார். இரு பெண்களும் ஒருவர் மற்றவரது முகத்தைப் பார்த்து முலித்து நின்றனர். ஹனீபா கூறினார் இப்படித்தான் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை ஒரே காலத்தில் திருமணம் முடித்தாலோ உறவு வைத்தாலோ நடக்கின்றது.”  என்று விடயத்தை நாசூக்காகச் சொல்லிவிட்டார். வந்த இருவருக்கும் விடயம் நன்கு புரிந்துவிட்டது. அருகில் நின்ற தந்தை அன்றிலிருந்து தன்னை அபூ ஹனீபா -ஹனீபாவின் தந்தை- என்றே அறிமுகப்படுத்திக்கொண்டார். 

இன்று வரைக்கும் நுஃமான் பின் ஸாபித்என்ற அவரது இயற்பெயரை விட அபூ ஹனீபா என்ற பெயரிலேயே அவர் பிரபல்யம் பெற்றிருக்கின்றார். ஒரு பெண் ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்ய முடியாது என்பதற்கு இதுவொரு பகுத்தறிவு ரீதியான, தர்க்கரீதியான, யதார்த்தபூர்வமான சான்றாக உள்ளது. இதுவே இறை நியதியும் கூட.

Share online counter

No comments: