Thursday, October 21, 2010

பாதிபிய்யா மதில் முச்சக்கர வண்டி மீது உடைந்து வீழ்ந்ததில் முச்சக்கர வண்டிக்கு கடுமையான சேதம். ஓட்டுனர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

 
கஹடோவிட பாதிபிய்யா தக்கியாவைச் சுற்றி அமைக்கப்பட்டடிருந்த மதில் இன்று காலை 11.40 மணியளவில் உடைந்து பாதையில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றின் மீது வீழ்ந்தது. முச்சக்கர வண்டி ஓட்டுனர் படுகாயத்திற்குள்ளாகி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
மையவாடிக்கருகாமையில் ஸாவியா மத்ரஸா கட்டடத்துக்கு எதிரில் இருந்த பகுதியே இவ்வாறு திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது. நீண்ட நாட்களாக இந்த மதில் வெடித்து பாதையின் பக்கம் சாய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share online counter

No comments: