கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலயத்திற்கு 10 கணினிகள் அக்குரணையைச் சோ்ந்த ஒரு தனவந்தரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் சிலரின் அயராத முயற்சியின் விளைவாக இக்கணினிகள் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபா வழங்கியிருந் ஆறு கணணிகளும் இருந்ததோடு கல்வித் திணைக்களத்தால் புதிதாக வழங்கப்படட்டுள்ள மேலும் ஆறு கணணிகளும் இரண்டு அச்சு இயந்திரங்களும் இன்னும் ஒரு சில நாட்களில் பாடசாலைக்கு வந்து சேர இருக்கின்றன. தகவல் தொழிநுட்பம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒரு பாடமாக அங்கீகரி்க்கப்பட்டதை அடுத்து பல பாடசாலைகளில் இப்பாடம் போதிக்கப்படுகிறது. எமது பாடசாலையிலும் தற்போது தகவல் தொழிநுட்பத்தைப் போதிக்கப் பற்றாக் குறையாக இருந்த கணினிப் பிரச்சினை தீர்ந்துள்ளது எனலாம். எது எப்படியிருப்பினும் மாணவர்கள் தமக்குக் கிடைக்கின்ற இவ்வாறான வசதிகளை உரிய முறையில் பயன்படுத்தி தமது கற்றல் நடவடிக்கைகளைச் சிறப்பாக செய்வது கட்டாயமானது.
குறித்த இந்த தனவந்தர் சென்ற வாரம் பாடசாலைக்கு வருகை தந்து கணணி அறையைப் பார்வையிட்டதுடன் எதிர் காலத்திலும் பாடசலைக்கு உதவ வேண்டும் என அதிபர் விடுத்த வேண்டுகோளையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளார். மிக விரைவில் இகக்கணணி கையளிக்கும் வைபவம் மேல் மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.
Share
No comments:
Post a Comment