Sunday, August 1, 2010

ஊரில் கூட்டுறவுச்சங்க தேர்தல் - மாற்று அணி வெற்றி

அத்தனகல்ல பலநோக்குக் கூட்டறவுச்சங்க பணிப்பாளர் சபையைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அனைத்துப் பிரதேசங்களிலும் போட்டியின்றி அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் ஊரில் ஆளும் கட்சி பிளவு பட்டிருப்பதால் இரண்டு அணிகள் போட்டியிட்டன. இதில் பரம்பரையாக ஸ்ரீ.ல.சு.கட்சியை ஆதரிக்கின்ற அணி படுதோல்வி அடைந்துள்ளது. மாற்று அணியில் களமிறங்கிய ஜனாப் இத்ரீஸ் முதலிடத்தைப் பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 82.

700 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும் 130க்கும் குறைவானவர்களே வாக்களிப்பில் கலந்து கொண்டது விசேட அம்சமாகும்.

அதற்கிடையில் பல தசாப்தங்களாக ஊரில் இயங்கி வருகின்ற கூட்டுறவுக் கடையை வேறு பிரதேசத்துக்கு மாற்றுவதற்கான முயற்சிகளும் திரை மறைவில் மேற்கொள்ளப்படுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு இந்த கூட்டுறவுக்கடையை ஊரிலேயே இயங்கச் செய்ய வேண்டுமென்பது அனைவரினதும் எதர்பார்ப்பாகும்.
Share online counter

No comments: