கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் பொதுக் கூட்டம் 25.07.2010 ஞாயிறு காலையில் அதிபர் புஹாரி உடயார் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது. 4 வருடங்களின் பின் இடம்பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் பெற்றோர் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.
பாடசாலை எதிர்நோக்குகின்ற சவால்கள் பற்றியும் இச்சவால்களுக்கு மத்தியில் பாடசாலையை முன்னேற்றுவதற்காக பெற்றோரும் நலன்விரும்பிகளும் செய்து வரகின்ற பாரிய பங்களிப்பு பற்றியும் அதிபர் நினைவு படுத்திப் பேசினார்.
இங்கு அல் பத்ரியா நலன்புரிச் சங்கம் பற்றியும் அல் பத்ரியா நடைபவணி பற்றியும் எழுப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு ஜனாப் ஜவ்ஸி பதிலளித்துப் பேசியதோடு இந்த Cரில் யாருமே இருபாடசாரைலகளையும் பிரித்து நோக்க வேண்டாமென்றும் இனைவரும் இணைந்து இரு பாடசாலைகளுக்கும் தமது உதவி ஒத்தாசைகளை மேறகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
கடந்த 4 ஆண்டுகளாக கூட்டம் கூட்டப்படாதிருந்த நிலையில் பொருளாளரால் 2006ஆம் ஆண்டுக்கான கணக்குகள் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மௌலவி பைரூஸ் அவர்கள் ஏனைய ஆண்டுகளுக்கான கணக்குகளும் வெளியாரின் நன்கொடைகளால் பாடசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான கணக்கு விபரங்களும் பொதுமக்களிடம் சமர்ப்பிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
இடைமறித்துப் பேசிய முஜீப் மௌலவி அவர்கள் தாம் இப்பாடசாலைக்கு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி பாரிய வேலைகளைச் செய்து கொடுப்பதாகவும் எத்தனை கூட்டங்கள் கூட்டினாலும் தன்னால் அதற்கான கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என்றும் பணம் தருபவர்களுக்கு மாத்திரமே தான் கணக்குக் காட்ட கடமைப்பட்டள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நிர்வாகக் குழுத் தெரிவின் போது பழைய நிர்வாகம் சிறப்பாக இயங்குவதால் அந்த நிர்வாகத்தையே மீண்டும் தெரிவு செய்வது சிறந்தது என சபையோர் கருத்துத் தெரிவித்தனர். ஆதன்படி புதியவர்கள் சிலரோடு பழைய நிர்வாகத்தில் அதிகமானோர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.
Share 
No comments:
Post a Comment