Monday, August 16, 2010

புனித அல்குர்ஆனின் அடிப்படையிலான வாழ்க்கையே மிகச்சிறந்த வாழ்க்கை - கஹடோவிட ஓகொடபொல பள்ளிவாசல்கள் சம்மேளன அங்குரார்ப்பணக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி தெரிவிப்பு

 
கடந்த பல மாதங்களாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய கஹடோவிட ஓகொடபொல பள்ளிவாசல்கள் சம்மேளனம் நேற்று (2010.08.08) அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது. 
 
இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வீரங்குல பொலிஸ் நிலைய சார்ஜன்ட் திரு. ஆரியரத்ன அவர்கள் புனித அல்குர்ஆனின் அடிப்படையிலான வாழ்க்கையே மிகச்சிறந்த வாழ்க்கை எனக் குறிப்பட்டார். உலகில் வாழ்கின்ற மக்களில் தாம் ஏற்றுக் கொண்ட மதத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படுகின்றவர்களில் அதிகமான விகிதாசாரத்தினர் முஸ்லிம்களே. அறியாமைக்கால அரேபியாவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பல தெய்வ வழிபாடு கோத்திர வெறி கொலை கொள்ளை உள்ளிட்ட பஞ்சமா பாதகங்கள் அனைத்தையும் பார்த்த முஹம்மத் நபியவர்கள் அவை பற்றி கவலை கொண்டவர்களாக குகையொன்றினுள் தன்னந்தனியாக இருந்து சிந்தித்தவர்களாக இருந்தார்கள். உலக மக்களுக்கு நேரான வழியைக் காட்டுவதறகாக முஹம்மத் நபியவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து புனித குர்ஆனை ஜிப்ரீல் (அலை) மூலமாக வழங்கினான். அந்த புனித வேதத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் அடங்கியுள்ளன. அதற்கு இணையாக உலகில் எந்தப் புத்தகமும் கிடையாது. ஏவ்வளவு பெரிய பேரரிஞராக இருப்பினும் இது போன்ற வழிகாட்டலை வழங்க முடியாது. அதிலே கடவுளை வணங்க வேண்டிய முறை உணவு உட்கொள்ள வேண்டிய முறை குடும்பம் நடத்துகின்ற முறை பணம் சம்பாதிக்கின்ற முறை என வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விடயங்களும் அமைந்துள்ளன. இந்த சம்மேளன அறிமுகம் பற்றி முன்னால் பேசிய சகோதரர் குறிப்பிட்ட விடயங்கள் கவலை அளிக்கின்றது. தீய செயல்களின் பக்கமும் ஒழுக்கயீனங்களின் பக்கமும் முஸ்லிம்கள் செல்கின்ற நிலை பற்றி அவர் குறிப்பிட்டார். இவ்வளவு அற்புதமான ஒரு வேதத்தைக் கையில் வைத்துக் கொண்டு இவ்வாறான நிலைக்க முஸ்லிம்கள் செல்வது கவலையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது என்றார்.
 
கலாநிதி நபீஸ அவர்கள் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றினார்.

நிட்டம்புவ பொலிஸ் அதிகாரிகளும் கம்பஹா உதவித் தேர்தல் அணையாளர் ஜனாப் மொஹமட்அவர்களும் இங்கு உரையாற்றியதோடு சம்மேளனம் பற்றிய சுருக்கமான அறிமுக உரையை சகோதரர் ஜவ்ஸி நிகழ்த்தினார். பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் ஊர் ஜமாஅத்தார்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 
ஏற்பாட்டாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைப் பார்க்கும் போது பங்கு பற்றியோரின் தொகை திருப்திப்படக் கூடியதாக இருக்கவில்லை.
எவ்வாறாயினும் இந்த ஆரம்பம் சிறந்த எதிர்காலத்தை நோக்கிய பயணமாக அமைய நாம் பிரார்த்திக்கின்றோம்.
Share online counter

1 comment:

عمار مطاوع said...

السلام عليكم
كل عام وانت بخير
عيد سعيد
تشرفت بزيارة مدونتك

معذرة علي عدم تعليقي علي الموضوع
لاني لا أعرف اي لغات اخري
غير اللغة العربية فقط

اخوك
عمار
بلاد العرب - مصر - القاهرة


Peace be upon you
Each year and you are fine
Happy Holiday
I had the honor to visit your blog

Sorry for not my comment on the issue
Because I do not know any other languages
Non-Arabic only

Brother
Amar
Arab countries - Egypt - Cairo