இஸ்லாமை தடை செய்யக் கோரும் முஸ்லிம் பெண்மணி
"இஸ்லாம் ஒரு மதமல்ல. அது ஒரு அரசியல் சித்தாந்தம். முஸ்லிம் அல்லாதவரை கொல்வதில் தவறில்லை என்று பள்ளிக்கூட நூல்களிலேயே வெறுப்பை விதைக்கிறது. அதனை தடை செய்வதில் தவறில்லை." இவ்வாறு கூறுகிறார் சிரியாவை சேர்ந்த மனோதத்துவ நிபுணரான Wafa Sultan . கடந்த 18 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இஸ்லாம் தொடர்பான அரசியல் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். 2006 ம் ஆண்டு, அல் ஜசீரா தொலைக்காட்சி நேர்காணலில் பின்னர் இவர் பிரபலமானார். இஸ்லாமைப் பற்றிய அவரது கருத்துகள் பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளன. சிரியாவில் தான் படித்த பாடப்புத்தகத்தில் "இறைதூதர் முகமது ஒரே இரவில் 900 யூதர்களின் தலையை வெட்டியதாகவும், அதே நாளில் தகப்பனை சகோதரர்களை இழந்த பெண்ணுடன் படுத்தாகவும் எழுதப்பட்டுள்ளது." என்று கூறுகின்றார். அப்படிப்பட்ட மதத்தை சீர்திருத்துவது நடைமுறைச் சாத்தியமன்று என்கிறார். "இஸ்லாம் சமாதானத்தை போதிக்கும் மதம்" என்பது குறித்த அவரது கருத்து என்ன? "அப்படிக் கூறுபவர்கள் இஸ்லாத்தை பற்றி குறைவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். அல்லது மற்றவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இஸ்லாமில் ‘Al Takiyya’ என்ற ஒரு கொள்கை உண்டு. அதன் அர்த்தம், முஸ்லிம்கள் தமது இலக்கை அடைவதற்காக மற்றவர்களை தவறாக வழிநடத்தலாம்."
அண்மையில் நெதர்லாந்தை சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்வாதி வில்டர்ஸ் மீதான வழக்கில் சாட்சியமளிக்க நெதர்லாந்து வந்திருந்தார். நெதர்லாந்து தொலைக்காட்சி அவரை பேட்டி எடுத்தது. Wafa Sultan வழங்கிய நேர்காணல் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் முழுவதும் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. Wafa Sultan இன் அனைத்துக் கருத்துகளுடனும் எனக்கு உடன்பாடில்லை. இருப்பினும் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் இஸ்லாமிய மதத்திலும் இருக்கிறார்கள் என்பதை அறிய வேண்டுமென்பதற்காக இந்த வீடியோவை பதிவிடுகின்றேன்.Share
No comments:
Post a Comment