கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 2010.07.25 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிபர் புஹாரி உடயார் தலைமையில் நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பாடசாலையின் அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டம் கூட்டப்படாமல் இருந்த அதே வேளை புதிய அதிபர் நியமனம் பெற்ற பின்னர் பொதுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பெற்றோர்களில் சிலரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் பாடசாலையை ஒரு ஸ்திர நிலைக்குக் கொண்டு வரும் வரை காலதாமதம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
நிர்வாகக்குழுக் கூட்டத்தின் போது பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாகவும் பாடசாலையின் முன்னேற்றத்துக்கு பெற்றோரதும் பொது மக்களதும் அதிகளவு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Share

No comments:
Post a Comment