Tuesday, June 22, 2010

புலிகளின் புலனாய்வு வல்லமையை படையினர் அறிந்திருக்க வேண்டும் - கொட்டாபய ராஜபக்ச

 
புலிகள் அமைப்பின் புலனாய்வு வல்லமையை தமது படைகளிலுள்ள அனைவரும் அறிந்திருக்க வேண்டும் எனவும், அவ்வாறு அறிந்தால் அவர்கள் மீளக் கட்டியெழுப்பப்படுவதைத் தடுக்க முடியும் எனவும், சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா படையினர் மீளக் குடியேறியுள்ள மக்களுடன் நெருங்கிப் பழகினால் விடுதலைப் புலிகள் மீளக் கட்டியெழுப்ப விடாது தடுக்க முடியும் எனவும், கடற் படையினர் வெளிநாடுகளில் பயிற்பெற்றுவரும் விடுதலைப் புலிகள் ஊடுருவாது கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

முல்லைத்தீவில் பெரும் செலவுடனுடன், பொதுமக்களிற்குச் சொந்தமான விசாலமாக நிலப்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட படைத் தலைமையகத்தை நேற்று திறந்து வைத்து, படையினர், தளபதிகள் மத்தியில் உரையாற்றியபோது கொட்டாபய இதனைத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டிலுள்ள அவர்களின் கட்டமைப்புக்கள் மற்றொரு போரை ஆரம்பிக்கக்கூடிய வல்லமையுடன் இயங்கி வருவதாகவும், இது தொடர்பாக அனைவரும் வழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

No comments: