Saturday, June 5, 2010

பட்டப்பகலில் ஊரில் சாராயம் பாவனை – தட்டிக் கேட்டவருக்கு அச்சுறுத்தல்

ஊரின் மத்திய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில் முஸ்லிம்கள்? சாராயம் அருந்தியுள்ளனர். இதை அவதானித்த சிலர் விடயத்தைப் பகிரங்கப்படுத்தாமல் உரிய முறையில்  தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேவையான நடவடிக்கைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதன் பின்னர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் சிலருக்கு குறித்த குடிமகனால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு மற்றும் சிலரை மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அத்தோடு கடந்த சில காலங்களாக இறைச்சிக்கடைப் பகுதியில் சாராயம் பதுக்கி வைக்கப்படுவதாகவும் அவ்வப்போது தேவைப்பட்டவர்களுக்கு வினியோகிக்கப்படுவதாகவும் சில சந்தர்ப்பங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகின்றன.

சாராயம் காய்ச்சுபவரிடமிருந்து சாராயத்தைக் கொண்டு வருவது  வினியோகிப்பது மற்றும் குடிப்பது அனைத்திலும் சம்பந்தப்பட்டிருப்பது முஸ்லிம்?களே என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

அண்மையில் அந்நியாகள் சிலர் ஊரில் சாராயம் குடிக்க முற்பட்ட போது தட்டிக் கேட்டதால் பெரும் குழப்பம் விளையப் போனது தெரிந்ததே.

Share online counter

No comments: